சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் இந்த படம் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜெயிலர்’ படத்தை போல மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.