மறைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் ( police explanation ) மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில் நேற்று அவரது தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜெயக்குமாரின் இந்த மரணம் சந்தேக மரணமாக பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மறைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணாக்கருக்கு அண்ணாமலை வாழ்த்து..!!
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள காவல்துறை கூறியதாவது :
கடந்த 2ம் தேதி தான், ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார்
புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக ஜெஃப்ரின் அந்த கடிதத்தை காவல்துறையினரிடம் அளித்தார்
அந்த கடிதத்தில் 30.4.2024 என போடப்பட்டிருந்தது, அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை
தனிப்படை அமைத்து விசாரித்தபோது, மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு ( police explanation ) வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.