‘வானதி சீனிவாசன் கேள்வி‘இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி, அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போது இருந்த திமுக அரசு” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில், ஒரே கட்டமாக 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் வலுவான ஆட்சியை அமைக்க பாஜக பமாகவுடன் கூட்டணி அமைத்து தனது தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து , கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக பாஜக கட்சி முன்னணி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருக்கிறனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.அதில், காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவகாரம் தற்பொழுது திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையே நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது கச்சத்தீவு விவகாரம் தேர்தல் நெருகும் நிலையில் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
அந்த வகையில் ,கோவை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை அவர்களுடன் கண்ணப்பன் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் . அப்போது பேசிய வானதி இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி, அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போது இருந்த திமுக அரசு என குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து சமூகவலை தள பக்கத்தில் #பதில்_சொல்லுங்க_ஸ்டாலின், என்ற ஹாஸ்டேக் கை பதிவிட்டு பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொதுமக்களின் சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வானதி சீனிவாசன் கேள்வி-இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி, அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்.
இதையும் படிங்க: ”எப்பொழுது தான் திருந்துவீர்கள்?” – அனிதாவுக்கு வானதி எச்சரிக்கை!
வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் நாடு.
இது தெரிந்தும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் சீனிவாசன் .அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேட்கும் 4 கேள்விகள்:
- 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ்நாடு வரியாக தந்த ஒரு ரூபாய்க்கு, மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?
- மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இண்டி கூட்டணியின் நிலைப்பாடா?
- மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?
- நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், அதிவிரைவு ரயில்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடு என 1998 – 2004 வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதை யாராலும் மறுக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.