மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு பிளாஸ்டிக் பஸ் ஒரு கையிலும்,காலை உணவு திட்டத்திற்கு காலிஃப்ளவர் மற்றோர் கையிலும் வைத்துக் கொண்டு முதல்வரின் இரண்டு ஓவியங்கள் “ஒரே நேரத்தில்”வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஓவியம் வரைந்து அசத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு,
முதல்வர் செயல்படுத்திய திட்டங்களான மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு பிளாஸ்டிக் பஸ் ஒரு கையிலும், மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு காலிஃப்ளவர் மற்றொரு கையிளும் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முதல்வரின் இரண்டு ஓவியங்களை வரைந்தார்.
தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கவனம் ஈர்த்த திட்டங்கள்- மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் மற்றும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்.
மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்:
பெண்கள் உயிர் கல்வி பெறுவதற்கும், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்களுக்கும் மற்றும் துணிக்கடைகளில், சிறு நிறுவனங்களில், தூய்மை பணியாளர்களாக, கட்டட வேலையில் சித்தளாக பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் பெண்களுக்கு இந்த மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்:
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கவும், இடநிற்றலை தவிர்த்து பள்ளிக்கு வருவதை அதிகரிக்க போன்றவை ஆகும். காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு கல்வியறிவு பெறும் திட்டம்.
இத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள்”ஒரே நேரத்தில்” பிரஷ் பயன்படுத்தாமல் மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு “பிளாஸ்டிக் பஸ்” ஒரு கையிலும்,மற்றோருகையில் காலை உணவு திட்டத்திற்கு “காலிஃப்ளவர்” வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களை இரண்டு ஓவியங்களாக வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாய் என்றும் நன்றாக வரைந்துள்ளீர்கள் என்றும் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.