பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் அதிகரித்துவருவதால் பல்வேறு பிரபலங்களும் இந்த கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.