ஹைதராபாத்தில் விநாயகருக்கு படைத்த லட்டு ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவின் பண்ட்லகுடாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அந்தவகையில் இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளும் லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளும் பக்கதர்களால் படைக்கப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம் .
Also Read : இனி பயப்பட தேவையில்லை – நாசா எச்சரிக்கை விடுத்த சிறுகோள் பூமியை கடந்து சென்றது..!!
அந்தவகையில் பண்ட்லகுடாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பிரமாண்ட லட்டு படைக்கப்பட்டது.
சிலை கரைப்பு நாளில் அந்த லட்டு ஏலம் விடப்படும் நிலையில், இந்த ஆண்டு ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு அந்த லட்டு விற்பனையாகி உள்ளது.
இந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு அப்பகுதியினர் செலவு செய்ய உள்ளதாக அப்பகுதியின் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளனர்.