குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல் துறையினரின் ( tnpolice ) தார்மீக கடமைக உள்ளது. இதற்காகச் சென்னை பெருநகர காவல் ஆணையகரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், சமீப காலமாக ஒரு சில போலீசாரின் செயல்பாடுகள், இணையங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல், போலீசாரின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் பணியில் இருக்கும் போது முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்தால், அவர்களுடன் செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது, குறிப்பாக காவல்துறை உடையில் இருக்கும் போது ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக் கூடாது என்று அறிவிப்பு விடுத்துள்ளார்.
இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலிசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு போலீசார் பணியின் போது செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்புவெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் நடந்த தேர்தலின் போது, நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த போது காவலுக்கு நிக்க வேண்டிய பெண் காவலர் ஒருவர் தனது கடமையை மறந்து அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசு பொருளாக ஆனது. பணியின் போது இவ்வாறு நடந்து கொண்டதால் அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் இந்த சம்பவம் தான் தற்போதைய உத்தரவிற்குக் காரணம் என்று பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, ரோந்து பணி போன்றவற்றில் போலீசார் கட்டுப்பாட்டுடன் ( tnpolice ) சிறப்பாக எப்படி பணியாற்றுவது போன்ற பல்வேறு வழிகாட்டல்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.