Chennai Airport Fraud : புதுவை வினோபா நகரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்க. கலைமாறன் என்பவரிடம், அர்ச்சுனன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்க. கலைமாறன் சில மாதங்களுக்கு முன்பு மனை தொடர்பாக அளித்த விளம்பரத்தைப் பார்த்து சென்னையில் இருந்து அர்ச்சுனன் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.
புதுவையில் 20 ஆண்டுக்கு முன்பு பத்திரிகையாளராகப் பணி செய்ததாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அர்ச்சுனன், சென்னையில் பிரபல தொலைக்காட்சிகளில் பணி புரிந்ததாகவும் தற்போது சென்னை விமான நிலையத்தில் பணிபுரிவதாகவும் கூறி நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம், கேன்டீன் மற்றும் தோட்டத்திற்கான டெண்டர் விடப் பட்டுள்ளதாகவும் (Chennai Airport Fraud), அதனை எடுத்தால் அதிக லாபம் ஈட்ட லாம் என்றும் தங்க கலைமாறனிடம் அர்சுணன் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அது தொடர்பாக ராஜ்குமார் என்பவரையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதனை நம்பிய தங்க கலை மாறனும் தனது தொகையான ரூ.25 லட்சத்துடன் நண்பர்களிடம் இருந்தும் பணம் பெற்று மொத்தம் ரூ.60 லட்சத்துக்கு வரை வோலை எடுத்து கொடுத்துள்ளார்.
அதற்கு விமான நிலைய அதாரிட்டி தொழிலாளர் யூனியன் என்ற பெயரில் வரைவோலையை கொடுத்து அதற்கு 3 பேர் கையெழுத்திட்ட ரசீதையும் அர்சுணனிடம், தங்க கலை மாறன் பெற்றுக் கொண்டார்.
பணம் கொடுத்த பின்னரும், தங்க கலை மாறனுக்கும், அவரது நண் பர்களுக்கும் எந்த டெண்டரும் கொடுக்கப்படாததால், சந்தேகம் அடைந்து விசாரித்தபோது,
அர்ச்சுனன் கூறியது போன்று அப்படி எந்த ஒரு யூனியனும் இல்லை என்றும், ராஜ்குமார் அங்கு பணிபுரியவில்லை என்பதும், அவர்கள் கொடுத்த ரசீதும் போலியானது என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அர்ச்சுனனையும், ராஜ்குமாரையும் தொடர்பு கொண்டு தனக்கும், தனது நண்பர்களுக்கும் சேர வேண்டிய ரூ.60 லட்சத்தை திரும்ப தருமாறு தங்க கலைமாறன் கேட்டுள்ளார்.
பணத்தை திரும்ப தருவதாக ஒப்பு கொண்ட அவர்கள் அதன் பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்க கலைமாறன் இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒதியஞ்சாலை இன்ஸ் பெக்டர் செந்தில் குமார் இதுதொடர்பாக அர்சுணன் மற்றும் ராஜ்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
போலீசாரின் விசாரணையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அச்சம்பாடு என்னும் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் இதுபோல பலரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்து சிறை சென்று வந்ததும்,
அந்த மோசடி பணத்தில் 2கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு சொந்த ஊரில் அழகான பங்களாவை கட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாக இருக்கும் அர்ச்சுனனையும், அவரது கூட்டாளி ராஜ்குமாரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.