தஞ்சையில் ஆசிரியர் ரமணி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரமணி என்பவரும் மதன் என்பவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பெண் கேட்டு வீட்டிற்குச் மதன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற நிலையில், மதனை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று ரமணி கூறியதாக கூறப்படுகிறது.
ரமணி எடுத்த இந்த திடீர் முடிவால் கடும் ஆத்திரத்தில் இருந்த மதன் ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்று தான் மறைத்த வைத்திருந்த கத்தியால் ரமணியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமணியை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார் .
மதனை பிடித்த ஆசிரியர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர் . பட்டப்பகலில் பள்ளி வகுப்பறைக்குள் இப்படி ஒரு கொடுஞ்செயலில் ஈடுபட்ட மதனிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் ரமணி கொலை சம்பவத்தில் குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது; இச்சம்பவம் குறித்து மாணவர்கள் பயந்துவிடக் கூடாது; உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஏற்கனவே தஞ்சை சென்றுவிட்டார் நானும் தஞ்சைக்கு செல்கிறேன் இச்சம்பவம் குறித்து முதல்வர் போனில் விசாரித்தார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.