நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சென்னை, மெரினாவில் குடியரசு தின விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்,என்.ரவியை நேருக்கு நேர் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் தலையில் தொப்பியுடன் அமர்ந்திருந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
9 தேதி நடைபெற்ற தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத் தொடர்:
தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுகவில் தலைமை விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் ஓபன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி இருக்கைகள் அருகருகே வைக்கப்பட்டு இருந்தது.மேலும் சட்டபேரை சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆளுநர் (governor) ஆர்.என்.ரவி உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கிய போது தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில் இருந்த 65-வது அறிக்கையில் கவர்னர் வாசிக்க மறுத்து சொந்தமாக சேர்த்துப்படித்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில் ‘சமூக நீதி’ முதல் ‘திராவிட மாடல் ஆட்சி’ பெண்ணியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இடம்பெற்று இருந்ததை ஆளுநர் தவிர்த்து இருந்தார்.
65-வது பத்தியில் இருந்த ஆளுநர் வாசிக்க மறுத்த வார்த்தைகள்:
சமூகநீ்தி
சுயமரியாதை
அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்
பெண்ணுரிமை
மதநல்லிணக்கம்
பல்லுயிர் ஓம்புதல்
பெரியார்
அண்ணல் அம்பேத்கர்
பெருந்தலைவர் காமராசர்
பேரறிஞர் அண்ணா
முத்தமிழறிஞர் கலைஞர்
திராவிட மாடல் ஆட்சி
தமிழ்நாடு அமைதிப் பூங்கா
போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
`அவைக்குறிப்பில் இடம்பெறாது’ – முதல்வர் ஸ்டாலின்:
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம், பெண் அடிமைத்தனம் ஒழிப்பு போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துவிட்டார்.
மேலும் சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் உரையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதம் பாடும் முன்பே அவையை விட்டு பாதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
ஆளுநரை நேருக்கு நேர் சந்தித்த முதல்வர் :
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஏற்கெனவே ஒப்புதல் தந்த முழு உரை அவைக்குறிப்பில் பதிவேற்றப்பட்டது. தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து அவைக்கு வெளியிலும் விமர்சனக் கணைகள் பறந்தன.
இதனை தொடர்ந்து 17 நாட்களுக்குப் பிறகு குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என். ரவியும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்ப்பட்டது. குடியரசு தினத்தில் கொடியேற்ற கடற்கரை சாலைக்கு வரும் ஆளுநரை முதலமைச்சர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
அதன்பிறகு கொடியேற்றும் ஆளுநர், மேடைக்குச் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.
பின்னர், மேடையில் இருந்தபடி ஆளுநரும், முதலமைச்சரும் குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.சட்டப்பேரவையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநர் தலையில் தொப்பியுடன் வந்திருந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.