சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். அதில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதே மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில்,லியோ படத்தை அக்.19 ஆம் தேதி முதல் 24 வரை 6 நாட்களுக்கு தலா 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் லியோ சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே லியோ படத்தை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்றும், அனைத்து திரையரங்குகளுக்கும் ஒரே ஒரு சிறப்பு காட்சியை மட்டுமே திரையிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமின்றி லியோ டிரைப்பட சிறப்பு காட்சிகளை காண வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.