தளபதி விஜய்யின் மாஸான நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது அசத்தியுள்ளது .
தமிழ் சினிமாவின் வருங்காலம் என பெயர் வாங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக கைகோர்த்து நடித்துள்ள படம் லியோ .

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைய தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் தளபதியின் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக லியோ படத்தில் இருந்து ஒரு செம நியூஸ் கிடைத்தவுள்ளது . லியோ படத்தின் 1st சிங்கள் பாடலான நா ரெடி பாடல் தளபதியின் பிறந்தநாளன்று வெளியானது . வெளியான சிலமணி நேரத்தில் யூடியூபில் செம ட்ரெண்டான இப்பாடல் தற்போது மீண்டும் சாதனை படைத்துள்ளது .

அனிரூத் இசையில் தளபதியின் குரலில் உருவான இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சிறப்பான தரமான சாதனை படைத்துள்ளது .