தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்து தான் பார்க்கட்டுமே என்று மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி (udhayanidhi) சவால் விடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.பிறகு திருநெல்வேலி மாவட்டவளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா என்ற கேள்விக்கு,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழக அரசை கலைக்கும் யோசனை இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே. என்ன நடக்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.