புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது..
“2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை..எங்களால்தான் மற்றவர்களுக்கு பாதிப்பு.
தம்பி விஜய் அண்ணன் செய்வது சரி என்று ஏற்றுக்கொண்டால் என்னுடன் கூட்டணிக்கு வரட்டும். இல்லை என்றால் அவர் வேலையை பார்த்துட்டு போகட்டும். எனக்கு ஒரு கனவு உள்ளது. தேசிய மற்றும் திராவிடக் கட்சிகள் தவிர்த்து எங்களது கனவை ஏற்றுக்கொண்டு வருபவர்களை ஏற்போம்.
அம்பேத்கருக்கு விஜய் மாலையிடுகிறாரா வரவேற்கிறோம்.. அய்யா பெரியாருக்கு மாலையிடுகிறாரா அதையும் வரவேற்கிறோம்.. ஆனால், அதைப் போலவே எங்க தாத்தா திருவிகவுக்கும் மாலையிடனும். மறைமலடிகளுக்கும் மாலை போடனும்.
தாத்தா ரெட்டைமலை சீனிவாசனையும் போற்றனும். தாத்தா முத்துராமலிங்க தேவருக்கும் வரனும்.. இம்மானுவேல் சேகரனுக்கும் வரனும்.. தீரன் சின்னமலைக்குப் போடனும்.. பூலித்தேவனுக்கு போடனும்.. வேலுநாச்சியார், மருது பாண்டியாரைப் போற்றனும்..அழகு முத்துகோன், சுந்தரலிங்கனாரைப் போற்றனும்..
அதே போல இன்றும் எங்களுக்கு பெரியார் வழிகாட்டி தான். பெரியாரை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவே நாங்கள் பார்க்கவில்லை. அதேசமயம் தமிழ்த் தேசியத்தின் தலைவராகவும் ஏற்கவில்லை. சாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமை, பெண் உரிமைக்கு பெரியார் போராடினார். மறுக்கவில்லை. ஆனால் பெரியார்தான் போராடினார் என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
பெரியார்தான் போராடினார் என்றால் எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பல்லாங்குழி ஆடிக் கொண்டும் கோலிக் குண்டு ஆடிக் கொண்டுமா இருந்தார்கள்? என்ன விளையாடுறீங்க… அதென்ன பெரியார்தான்.. எங்க முன்னோர்கள் செய்யலையா? வள்ளுவர் ஜாதி ஒழிப்புக்குதானே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்றாரே” எனக் கொந்தளித்துள்ளார்.