இன்று 385-ஆம் சென்னை திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள வாழ்த்து பதிவில்,
“கனவுகள் சுமந்த மனிதர்களின்
கவலைகள் தீர்த்த பெருநகரம்!
வறுமையில் வற்றிய வயிறுகளின்
பசியைப் போக்கிய திருநகரம்!
ஓயாமல் உழைக்கும் மக்களின்
தாயாகத் திகழும் கலைநகரம்!
உலகெலாம் பரவிவாழும் தமிழர்
தலையெழுத்தைத் தீர்மானிக்கும்
நம் தலைநகரம்!
இதையும் படிங்க : 385-ஆம் சென்னை நாள்: இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்றுவோம்! – அன்புமணி!!
பல்லவர் கால கோயில்கள்,
அழகிய கடற்கரை,
பழமையான திரையரங்கம்,
புனித தோமையர் மலை,
சாந்தோம் தேவாலயம்,
பச்சையப்பன், எத்திராஜ், மாநிலக் கல்லூரிகள்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
கூவம், கொற்றலை, கிருஷ்ணா ஆறுகள்
என பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம் மறந்துபோய்…
பள்ளிக்கரணை குப்பைமேடுகள்,
பட்டப்பகலில் படுகொலைகள்,
கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை,
இடிக்கப்பட்ட வீடுகள் நடுவே அழுது புரளும் மக்கள்
இவைதான் இன்று சென்னையின் அடையாளங்கள் என்றாகிப்போனது.
மாறுவோம்! மாற்றுவோம்!
தலைநகர் சென்னையை மீட்போம்!
தாய்த் தமிழ்நாட்டைக் காப்போம்!
சென்னை திருநாள் நல்வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.