தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கடிதம் விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு(chandrababu naidu) கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆட்சியில் இருப்பவர்கள் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.எனவே சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் சிறைக்குள் செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதன் மூலம் தனது கௌரவம், பாதுகாப்பு, உயிர் ஆகியவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி.-க்கு மர்ம நபர் அனுப்பிய கடிதத்தில் தன்னை கொலை செய்ய கோடிக்கணக்கான ரூபாய் கை மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அதுகுறித்து போலீசார் விசாரணை கூட நடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் சிறைக்குள் தன்னை கேமராக்கள் மூலம் சிலர் படம் பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்பொழுது ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.