ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியவில் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மாநிலத்தின் முக்கிய பதிவிகளுக்கு நடைபெறும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கபடும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை, ₹10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த மசோதாவுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.