சோனியா காந்தியின் பிறந்த நாளைக்கு பிரதமர் மோடி(PM Modi )வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று(09-12-23) தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துளளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
“சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.