தமிழகத்தில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் கடந்த 2018 ம் ஆண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன.
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இவற்றின் செயல்பாடுகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளிகளில் தனியாக செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கள் இனி செயல்படும். இந்த பள்ளிகள் அனைத்தும் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் 1-5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என உறுதி அளித்துள்ளார்.