வருகிற ஜுன் 21ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது (local holiday).
இதுதொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..
“திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் காந்தியமதி அம்மன் கோவிலில் தேர்திருவிழா 21.06.2024 (ஆனி 7, வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பான பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
இதையும் படிங்க : நடந்தாய் வாழி காவிரி திட்டம் வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்!
மேற்படி 21.06.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1981 ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government securities) தொடர்பாக அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதோடு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.