Parandur : பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அங்குள்ள கிராம மக்கள் நீண்ட நெடு நாட்களாக போராடி வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தலையும் புறக்கணித்துள்ளனர் .
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அங்குள்ள கிராம மக்கள் நீண்ட நெடு நாட்களாக போராடி வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தலையும் புறக்கணித்துள்ளனர் .
Also Read : https://itamiltv.com/lok-sabha-election-status-at-7-pm-72-09-voter-registration-in-tamil-nadu/
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமத்தில், கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த கிராமத்தில் மொத்தம் 1375 வாக்காளர்கள் உள்ளனர்.அங்கு இரண்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் இறுதியாக 21 நபர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
Parandur : இதேபோல் நாகபட்டு கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 40 வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. அக்கிராமத்தில் 280 வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.