மயிலாடுதுறை பகுதியில் உள்ள மக்களை கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை (forest) இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை பகுதியில் உள்ள சாலைகளில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சிறுத்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திடுமோ என்ற பயத்தில் இரவில் நடமாடுவதை மக்கள் தவிர்த்து வருகின்ற்னர்.
Also Read : https://itamiltv.com/what-did-dmk-do-to-tamil-nadu-for-14-years-eps/
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்கும் படி காவல்துறை துறை சார்பில் தொடர்ந்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மயிலாடுதுறையில் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க 6வது நாளாக வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது . மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை (forest) பதுங்கியிருக்கலாம் என வனத்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது.