பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் மக்களவை தேர்தலுக்கான (Lok Sabha election) தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் வெளியாகி உள்ள தகவலில் தெரிவிருப்பதாவது :
தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என யூகிக்கப்படுகிறது
உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : https://itamiltv.com/india-brs-mlc-kavita-ed-raids-delhi-liquor-scam-hyderabad-telangana/
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலோடு நடத்த வாய்ப்பு இல்லை என்றும் மறுபக்க கூறப்படுகிறது.
தமிழகம் உளப்பட பல மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி (Lok Sabha election) பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற உள்ள நிலையில் நாளை இத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது அரசியல் களத்தில் சற்று பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.