கேரளாவில் ரசிகர்களுடன் லியோ படம் பார்க்க சென்ற அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் மாஸான நடிப்பில் லோகேஷ் கனகராஜின் முரட்டுத்தனமான இயக்கத்தில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலகாட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ஒளிபரப்பாகி வரும் லியோ படத்தை ரசிகர்களுடன் பார்க்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார் . அப்போது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய லோகேஷுக்கு எதிர்பாராத விதமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகி லோகேஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.மேலும் இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.