உத்திரப்பிரதேசத்தில் 15 வயதே நிம்பிய சிதக்தீப் சிங் சாஹல் என்ற சிறுவன், உலகின் நீளமான தலைமுடி வைத்திருப்பதற்கான கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிதக்தீப் சிங் சாஹல் மிக நீளமான கூந்தலை வைத்துள்ளார். அவர் தனது வாழ்நாளில் முடி வெட்டிக்கொண்டதே இல்லை. அவரது தலைமுடி தற்போது, 146 செமீ (4 அடி 9.5 அங்குலம்) நீளத்திற்கு வளர்ந்துள்ளது.
சிதக்தீப் பின் சாதனை கின்னஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தான் சீக்கிய மதத்தை சார்ந்தவன் என்றும், சீக்கிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, தலைமுடியை பராமரிப்பது.” என்று கூறி உள்ளார்.
மேலும் தனது தலைமுடியை தனியாக கழுவி, காயவைப்பதற்கு ஒரு மணிநேரம் வரை ஆகும் என்றும் தனது தாய் அனைத்து வேலைகளிலும் தனக்கு உதவி செய்வார் என்றும் சாஹல் கூறி உள்ளார்
. நீளமான தலைமுடி வைத்திருப்பதால் சிறு வயதில் இருந்தே தந்து நண்பர்கள் விமர்சனம் செய்ததாகவும், ஆனால் தற்போது தனக்கான அடையாளமே இந்த முடி தான் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கின்னஸ் உலக சாதனைகள் 2024 புத்தகத்தில் தனது சாதனை ஒரு பகுதியாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.