Lotus flower decoration in polling station : புதுச்சேரி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டது குறித்து, தி.மு.க. தரப்பினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் இருந்த தாமரை பூ வடிவிலான அலங்காரம் அகற்றப்பட்டது.
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை ஏப்ரல் 19-04-24 தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு குளுகுளு – வானிலை மையம்!
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டிகளாக தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலில் களம் காண்கின்றன.
நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
அந்த வகையில், புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டிடுந்தது Lotus flower decoration in polling station .
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க.விற்கு சாதகமாக இந்த அலங்காரம் இருக்கும் என தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய தேர்தல் அதிகாரிகள் தாமரை பூ அலங்காரங்களை அகற்றினர்.
இதையும் படிங்க : ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.. எதிர்கட்சிகள் அதிர்ச்சி..!