கால்கள் செயலிழந்த காதலனை திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் வலுக்கட்டாயமாக பிரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வள்ளியூர் அடுத்த கேசவனேரியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யா 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இரண்டு வருடத்திற்கு முன்பு பிரகாஷூ இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவட பாதிப்பால் அவரது 2 கால்களும் செயல் இழந்து விட்டன.இதனால் இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருவரும் பிரகாஷின் வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.இதனைக் கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர் பிரகாஷின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பிரகாசையும் சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி திவ்யாவையும் தரதரவென இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.இதில் காயம் அடைந்த பிரகாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருமணமாகி எட்டு நாளே ஆன நிலையில் தன்னிடம் இருந்து பிரித்து சென்ற மனைவியை குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு சேர்த்து வைக்குமாறு பிரகாஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நாட்டின் பிற பகுதிகளில், ஒன்பது நாள் நவராத்திரி திருவிழாவின் போது, பக்தர்கள் மா துர்காவின் ஒன்பது அவதாரங்களை வணங்கி அவளது ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் ஒரு தேவியின் வெளிப்பாடு உள்ளது.
இந்த ஒன்பது நாட்களில், மக்கள் சடங்கு விரதங்களை கடைபிடிக்கிறார்கள், ஒவ்வொரு தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்களை ஓதுகிறார்கள், புதிய ஆடைகளை அணிவார்கள், போக் கொடுக்கிறார்கள் மற்றும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்கிறார்கள்.