காதல் மனைவிக்கு தாஜ்மஹாலை பரிசளித்த கணவர்!

loving-husband-who-turned-his-house-into-a-taj-mahal
loving husband who turned his house into a taj mahal

மத்திய பிரதேசத்தில் தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை அமைத்து அதனை அவர் தனது மனைவிக்கு பரிசாக அளித்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

ஷாஜகானின் மனைவி மும்தாஜ் இறந்த பிறகு தனது மனைவிக்காக ஷாஜகான் தாஜ்மஹால்லை கட்டினார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் சோக்சே என்பவர் தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை தன் மனைவிக்காக கட்டியுள்ளார். இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே, அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

தாஜ்மஹால் போலவே அப்படியே கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ், தாஜ்மஹாலை பார்க்கும் போதெல்லாம் இது ஏன் மத்திய பிரதேசத்தில் இல்லை ஒரு ஏக்கம் தோன்றுமாம், . அந்த ஏக்கம் தான் இந்த வீட்டை கட்டவைத்துள்ளது என்று சொல்லபடுகிறது.

loving-husband-who-turned-his-house-into-a-taj-mahal
loving husband who turned his house into a taj mahal

வீட்டின் முதல் தளத்தில் 2 படுக்கையறைகள் மற்றும் இரண்டாவது மாடியில் மேலும் 2 படுக்கையறைகள் என இந்த வீட்டில் 4 படுக்கையறைகள் உள்ளன. மேலும் அரங்குகள், நூலகம் மற்றும் தியான அறையும் உள்ளேயே காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் உண்மையான தாஜ்மஹாலைப் போலவே இருளில் ஒளிரும் வகையில் படி கட்டப்பட்டுள்ளது. இந்த முழு வீட்டையும் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிட்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts