உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் செஸ் சாம்பின் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.உலகக் கோப்பை செஸ் போட்டியின் காலிறுதியில் தமிழகத்தை சேர்ந்த சக வீரரான அர்ஜூன் எரிகைசியுடன் பிரக்ஞானந்தா மோதினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7 ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். இந்த நிலையில் செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,
உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இரண்டாவது இந்தியர் என்ற தகுதியை பெறுவதற்கு இன்னும் ஒரு படி தொலைவில் உள்ளது. இந்தப் போட்டியில் பங்குகொண்டு மிகச் சிறப்பாக ஆடி பெருமை சேர்த்த அர்ஜுன் எரிகைசி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.