Minister Periyasamy Case |வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008- முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்குதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் 2012 ஆம் ஆண்டு பதிவான இவ்வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென ஐ.பெரியசாமி எம்.பி (Minister Periyasamy Case ) எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை ஏற்று ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விடுவித்தது.
இந்த சூழலில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஐ.பெரியசாமியிண் வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் மறுஆய்வு விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
அமைச்சர் ஐ.பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள்,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762029572709843120?s=20
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ’க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ’க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்,
நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்காண பிணையை செலுத்த வேண்டும் எனவும்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக விட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
முன்னதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களின் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.