“குத்தகை வசூல் பாக்கி”தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…

குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓசூரில் சேதமடைந்த வணிக வளாகத்தை புதுப்பிப்பதற்காக கடையை காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோரின் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது .

மனுதாரர்கள் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்ததாக ஓசூர் சார் ஆட்சியர் மனுக்களை விசாரித்த நீதிபதிகளிடம் தெரிவித்தார்

கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல, இதனால் சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர் . இதையடுத்து கடையை காலி செய்ய ஒசூர் மாநகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

மேலும் குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Total
0
Shares
Related Posts