மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு காரணமாக மருத்துவ குழு சிகிச்சை அளித்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் விழாக்கள் நடைபெறும். சுவாமி புறப்பாடும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக் கடந்த 2000 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்திலிருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது.

இந்த நிலையில் 27 வயதான இந்த யானை கோவில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் உலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவில் பங்கேற்ற பார்வதி யானைக்குக் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் கண்புரை ஏற்பட்டதன் காரணமாக உங்களில் சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் தாய்லாந்து மருத்துவ குழுவினர் கோவிலுக்கு அழைத்தவர் பட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.
தற்பொழுது மீண்டும் கோவில் யானை பார்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஒரு வாரமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்ட கட்ட நிலையில் யானை சோர்வாக உள்ளதால் நடைப்பயிற்சிக்குச் செல்லவில்லை. 4890 கிலோ எடை கொண்ட பார்வதி யானை தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாக தற்பொழுது எடை குறைந்து காணப்படுகிறது.
https://youtu.be/iHm5PiuM87E