நடிகை விஜயலட்சுமிக்கு(actress vijayalakshmi) கருக்கலைப்புக்குக் கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும்,தன்னை 7 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும்சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் சென்று, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி அளித்திருந்தார்.
இந்த நிலையில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. கடந்த 2 நாட்களாக விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்திலும் விஜயலட்சுமியின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சீமான் மீது தெரிவிக்கபட்ட புகார்களுக்குகாண ஆதாரங்களையும் பெற்று கொண்டனர்.
அப்போது விஜயலட்சுமி தனது புகாரில் சீமான் தன்னை 7 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குறிப்பிட்டிருந்த நிலையில் மதுரவாயல் போலீசார் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்த மருத்துவர், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக கையெழுத்திட்ட நபர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த பரிசோதனையில் கருக்கலைப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் சீமான் கைது செய்யபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.