திருவண்ணாமலையில்(thiruvannamalai) உள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்டுள்ள, மகா தீப தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலையில் கடந்த 17-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது.
இதனைய டுத்து 26-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதில், 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து நாளை காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரையை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது.