மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது தோழியுடன் உடலுறவு கொள்ளும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்தவர் அஜய் பார்டேகி (25). மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச் சேர்ந்த செவிலியரான 23 வயது பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இருவரும் பேஸ்புக்கில் பழகி வந்த நிலையில் காதலர்களாக மாறினர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் அஜய் பார்டேகியும் பெண்ணின் தாயாரை சந்தித்து தங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் உல்லாசம் அனுபவிக்க விரும்பிய அஜய் பார்டேகி, தனது காதலியை அழைத்து கொண்டு நாக்பூரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி, இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென காதலன் துடி துடித்து சரிந்து விழுந்தார். இதைக் கண்டு ஒன்றும் புரியாத காதலி விடுதியில் அறையில் இருந்து அலறினார். உடனே அங்கு வந்த விடுதி நிர்வாகத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மயங்கி கிடந்தா இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளைஞன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சயோனர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காதலன் காதலியுடன் நீண்ட நேரம் உல்லாசத்தில் ஈடுபட வயகரா மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும், அதன் விளைவாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் காதலனின் உள்ளுறுப்பு மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்செட்டி, உடலுறவின் போது மாரடைப்பு மிகவும் அரிதானதாகும். ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது. கண்டறியப்படாத கரோனரி தமனி நோய் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும், தற்காலத்தில் இளைஞர்களிடம் அதிக அளவிற்கு மாரடைப்பு காணப்படுகிறது, யாருக்காவது அறியப்படாத கரோனரி தமனி நோய் இருந்தால் உடலுறவு போன்ற நேரங்களில் அவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் இருதய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.