உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பதானா என்ற கிராமத்தில் வசித்து வரும் 85 வயதாகும் நது சிங் என்ற முதியவர், சொத்துக்கள் அனைத்தையும் மாநில அரசுக்கு உயில் எழுதி (property will) வைத்துள்ளார். இவருக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், அவரது மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டது. மேலும், அவரது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வு உயிரிழந்துவிட்டார்.
மேலும், மனைவி உயிரிழந்ததை அடுத்து நது சிங் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மகன் மற்றும் மகள்கள் 5 பேர் இருந்த போதிலும் தன்னை யாரும் கவனிக்காத காரணத்தினால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக தனது கிராமத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்துள்ளார்.
அந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்து 7 மாதங்கள் ஆன போதிலும் நது சிங்கை அவரது மகனோ, மகள்களோ யாரும் வந்து சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், ஐந்து பிள்ளைகள் இருந்தும் யாரும் தன்னை வந்து சந்திக்காமல் அவர்கள் அனைவரும் கைவிட்டதால் விரக்தியடைந்த நது சிங் தனது சொத்துக்கள் அனைத்தையும் உத்தரப் பிரதேச அரசுக்கு உயில் எழுதி (property will) வைத்து விட்டார்.
தனது மறைவுக்கு பின்னர் கிராமத்தில் உள்ள தனது வீடு 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உயில் எழுதி வைத்துள்ளார்.
மேலும், தன் நிலத்தில் மாநில அரசு பள்ளிக் கூடமோ அல்லது மருத்துவமனையோ கட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும், தன் மறைவுக்குப் பின் தன் சொத்துக்களை உத்திரப்பிரதேச அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த உயிலில் அவர் எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ள அவர் தனது மறைவுக்கு பின்னர் தன் இறுதி சடங்கிற்கு கூட மகன் உட்பட நான்கு மகள்களும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று உயில் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது சொத்துக்கள் அனைத்தையும் மாநில அரசுக்கு எழுதி வைத்துள்ளது தொடர்பாக அவரது சார்பதிவாளர் கூறுகையில்.. அவரது சொத்துக்கள் அவரது மறைவுக்குப் பிறகு மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஐந்து பிள்ளைகளைப் பெற்ற போதிலும் யாரும் தன்னை கவனிக்காததால் சொத்துக்கள் அனைத்தையும் மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறுதிச் சடங்கில் கூட பிள்ளைகள் யாரும் பங்கேற்க கூடாது என்று என்ற நது சிங்கின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.