மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இது போன்ற இழிச்செயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை வலியுறுத்தி 2 நாட்கள் கழித்து தனது கொந்தளிப்பை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மதம் 3 தேதி முதல் மெய்தி இன மற்றும் குக்கி இன சமூகத்திற்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் நடைபெற்று வருகிறது.ஒருகட்டத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குக்கி இன சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 பேரைக் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்திற்குப் பிரதமர் மோடி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் .. இது மணதீர்க்கு வேதனை தருகிறது எனத் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் பாஜகவின் பிரதான கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை .. எடப்பாடி ஏன் மௌனம் காக்கிறார் என்று அதிமுக எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ,மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் நாட்டிற்கே நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்.இனி இதுபோன்ற இழிச்செயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிப்பூர் முதலமைச்சருக்கு வலியுறுத்தி 2 நாட்கள் கழித்து தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.