மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய,ஒன்றிய அரசை கண்டித்தும், அம்மாநில பாஜக அரசை கலைத்திட வலியுறுத்தியும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :
மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும்; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டம் வருகிற 06-08-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர் கோட்டத்திலும்,
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரை , சேலம் , திருச்சி, நாகப்பட்டினம், நெல்லை,திருநெல்வேலி,விழுப்புரம், உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் நடைபெறவுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.