“நீங்கள் இந்தியாவின் பிரதமர் ஒரு முறையாவது சரியானதைச் செய்யுங்கள் மணிப்பூர் கலவரம் குறித்து நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா கோரிக்கைவிடுத்துள்ளார்.
மணிப்பூர்(Manipur) மாநிலத்தில் கடந்த மே மாதம் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி உள்ளது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியும் தற்போது வரை நீடிக்கிறது.
கடந்த மே மாதம் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சிலர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ,மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
மணிப்பூர்(Manipur) சம்பவம் வெட்ககேடானது .இந்த சம்பவத்திற்கு பாஜக அரசாங்கம் எப்போது பொறுப்பேற்கும்? மணிப்பூர் முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார்?பிரதமரை மோடி எப்போது வெளிநாட்டில் அரசு விருந்துகளை நிறுத்திவிட்டு மணிப்பூரைப் பற்றி பேசுவார்?நீங்கள் இந்தியாவின் பிரதமர். மணிப்பூர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. குக்கி பெண்கள் இந்தியாவின் மகள்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்.
பாரதத்தின் மீதுள்ள அன்புக்காக – உங்கள் மௌனத்தை முடித்துக் கொள்ளுங்கள். ஒரு முறை சரியானதைச் செய்யுங்கள். என்று தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் உள்நாட்டுப் போர் போர்க்குற்றங்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.இது நம் நாட்டில் நடக்கிறது.இது தான் பாஜக அரசு என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.