மணிப்பூர்(manipur) விவாகரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூரில் வசிக்கும் மெய்தி இனத்தவர் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்க்கு குகி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இந்த மோதல் வன்முறையாக மாறியது.
கடந்த 2மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பிவெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த வன்முறை சம்பவத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்.மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்,குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சிலர் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் 32 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 30க்கும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையல் மணிப்பூர் கலவரம் தொடர்பாக,உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
பாலின வன்முறையை நிலைநிறுத்த வகுப்புவாத கலவரத்தில் பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.பெண்களை வன்முறைக் கருவியாகப் பயன்படுத்தி மனித வாழ்க்கையை மீறுவது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது
மத்திய , மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிதுள்ளார்.