மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள்,எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் நடிகை, நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்:
மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆயுதம் ஏந்திய கும்பலால் நிர்வாணமாக அணிவகுத்துச் சென்ற செய்தியால் ஆழ்ந்த வருத்தம். மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடரும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதியை மீட்டெடுக்கவும், மணிப்பூரி பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம்:
மணிப்பூரில் என்ன நடந்தாலும் அதன் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் அது மிகவும் கொடூரமானது. பாரத் மாதா கீ ஜெய் சொன்னால் மட்டும் போதாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேதனைப்படுத்துகிறதுஎன காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் GV பிரகாஷ் :
மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்….கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…என இசையமைப்பாளர் GV பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை ப்ரியா பவானி சங்கர்:
மணிப்பூர் பெண்கள்- சமூகம், சமூகம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்தன. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இது போன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது என நடிகை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.