பணிவு , புத்திசாலித்தனம், அரசியல் திறன் கலந்தவர் மன்மோகன் சிங் Manmohan Singh – முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!
மாநிலங்களவை உறுப்பினராக இருந்து ஓய்வு பெறும் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங்க். அதன் பின்னர் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார்.
இதையும் படிங்க : மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது – எடப்பாடி பழனிசாமி
கடந்த 1991 முதல் மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே பதவி வகித்து வந்த மன்மோகன் சிங் கடந்த 33 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பியாகவே தொடர்ந்துள்ளார்.
இன்று அவர் தனது எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மன்மோகன் சிங்குக்கு தற்போது 91 வயது என்பதால் அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி.பதவி தரப்படவில்லை. அந்த இடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெறும் மன்மோகன் சிங்குக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் Manmohan Singh,
33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியற் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள், அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள்.
உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது.
உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
திமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன்.
உங்கள் ஞானம் மற்றும் தொலைநோக்கு மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நிறைவேறாத திட்டங்களே ஏராளம்..! தென்காசி கள நிலவரம் இதுதான்!