ஆந்திராவில் பெண் ஒருவரின் வீட்டிற்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்பவரின் வீட்டிற்கு பார்சல் ஒன்று வந்துள்ளது . என்னவென்று தெரியாமல் அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தபோது அந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்துள்ளது .
Also Read : வெற்றி பெற்றதா வெற்றிமாறனின் விடுதலை 2 – ரசிகர்களின் X தள REVIEW..!!
கோரமான நிலையில் இருந்த அந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பார்சலுடன்
வந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர் .
அந்த கடிதத்தில் 1.30 கோடி பணம் கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.