March 29 Gold Rate : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
இதையும் படிங்க : அடேங்கப்பா.. அண்ணாமலை, எல்.முருகன், ஆ.ராசாவின் சொத்து மதிப்பு..?
நேற்று (28.03.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,250-க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (28.03.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 யர்ந்து ஒரு கிராம் ரூ.5,120-க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,960-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.114 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,234க்கும், சவரனுக்கு ரூ.912 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,872க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது (March 29 Gold Rate)
இதையும் படிங்க : படு ஸ்ட்ராங்கான எடப்பாடி; படபடப்பில் ஓ.பி.எஸ்! – இது ‘சின்ன’ விவகாரம் இல்லீங்க!