ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர் ஒருவர், இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது என இருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் சந்தீப் ஓரான். இவர் அதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு பணிக்கு சென்றுள்ள இவர், அங்கு பணிபுரியும் சுவாதி குமாரி என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இவர்களது காதல் சந்தீப் மற்றும் லக்ரா குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. முதலில் 2 பெண்களும் எதிர்த்தாலும் சந்தீப் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் 2 பெண்களையும் சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராமத்தை எதிர்த்து சந்தீப் தனது காதலிகள் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சந்திப் கூறுகையில், “2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், இரண்டு பெண்கள் ஹீரோவை காதலிப்பார்கள். ஹீரோவும் இருவரையும் காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என பிடிவாதமாக இருப்பார்.
ஆனால் தற்போது ஜார்க்கண்ட் மாநிலதில் இரண்டு பெண்களும் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.