தியாகி S.S விஸ்வநாததாஸ் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்…தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்..
தியாகி S.S விஸ்வநாததாஸ் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய நலச் சங்கம் தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளி மத்திய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு இல்ல மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ளது. அவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அன்று அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்றும், அவரது நினைவு இல்லத்தைப் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் என்றும்,
மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய நல சங்கம் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளி மத்திய சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.