ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சென்னை மேயர் பிரியா ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமுகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் அங்குப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து,இருபதிற்கும் மேற்பட்ட திமுக அமைச்சர் ஈரோடு கிழக்குப் பகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சில தினகங்களுக்கு முன் ஈரோட்டிற்கு சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொது ஈரோடு காவிரி கரையில் உள்ள கலை பயிற்சி பள்ளிக்கு சென்ற அன்பில் மகேஷ் பறை இசைக்க கற்றுக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈபிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவின் இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திமுக அரசு சார்பில் திறக்கபடும் பிரம்மாண்ட மதுரை நூலகம் புகைபடம் மற்றும் aiims என எழுதிய செங்கல் போன்றவை வைத்து பிரச்சாரம் செய்தார்.
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முரசு கொட்டி கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்காளர்கள் மத்தியில் சென்னை மேயர் பிரியா ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கிய சென்னை மேயர் பிரியா ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமுகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.