வடகிழக்கு பருவமழையை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது .இன்று தொடங்கும் இந்த மருத்துவ முகாம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை 10 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அந்தவகையில் சென்னையில் நடைபெறும் மருத்துவ முகாமை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் சத்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் 3.93 லட்சம் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இதுபோன்ற மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறை எனவே மக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவ முகாம்களை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.