சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஏற்பட்ட கோர விபத்தில் (Medical students) மருத்துவ மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
புதுச்சேரியில் மருத்துவம் பயின்று வந்த 5 மருத்துவ மாணவர்கள் நண்பரின் வீட்டுக்கு சென்று திரும்பியுள்ளனர்.
அப்போது சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் காரில் இருந்த மருத்துவ மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில மாணவர்களை மீட்ட அக்கபக்கத்தினர் அவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துளள்னர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து விசாரணை நடைதிய போலீசார் கூறியதாவது இந்த விபத்து அதிகாலை நடந்திருப்பதாகவும்
சேலத்தை சேர்ந்த கெளதம் (20), (Medical students) கன்னியாகுமரியைச் சேர்ந்த காம்கோ (21) இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர் .
ஜெகநாத் (21), தரண் (23), பிரவீன் (21) ஆகிய மூவரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரில் வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் காயம், ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் விழுந்த பெண் பயணியை பொதுமக்கள் ஒன்று கூடி தற்போது தேடி வருகின்றனர்.
Also Read : https://itamiltv.com/hearing-senthil-balaji-bail-adjournment/
விபத்தில் காயமடைந்த பயணிகளை அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அளித்து செல்லப்பட்டுள்ளனர்
ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் சிலர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.