Site icon ITamilTv

மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் குறித்து விபரம் வெளியீடு..!

Spread the love

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ள நிலையில், கல்வி கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ படிப்பு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ. 13,610. பிடிஎஸ் இடங்களில் சேர ஆண்டுக்கு ரூ.11,610 ஆகும். இதில் கே கே நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு மட்டும் கல்வி கட்டணம் ரூ.1 லட்சம் ஆகும்.

சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு கல்வி கட்டணம் ரூ.3.85 முதல் ரூ. 4 லட்சம் வரையிலும் பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.2.50 லட்சமும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பதாரர் கலந்தாய்வில் கலந்து கொண்டு விருப்பமான இடங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.

அதே போல் படிப்பில் சேர்ந்து இடையில் நின்றால், இடை நின்ற கட்டணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கட்ட வேண்டும். அது எந்த காலகட்டத்திற்குள் இடை நிறுத்தம் என்ற விவரமும் அதற்கு தகுந்த அபராத கட்டண விவரமும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Spread the love
Exit mobile version